தமிழ்நாடு

சிறை அலுவலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரிப்பு – இருவர் கைது

சிறை அலுவலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரத்தில் இருவர் கைது.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கடலூர் மத்திய சிறை அருகே உள்ள உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அவரது குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொல்ல மர்ம நபர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். உதவி ஜெயிலர் மணிகண்டன் குடியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவர் வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அறை […]

- 2 Min Read
Default Image

ஓபிஎஸ் தரப்பு எங்கு சென்றாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம் – தங்கமணி

ஓபிஎஸ் தரப்பு எங்கு சென்றாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம் என்று தங்கமணி பேட்டி.  ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி,  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, […]

#ADMK 3 Min Read
Default Image

முனைவர் பரசுராமன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

முனைவர் பரசுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்.  Tata Institute of Social Sciences கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த, முனைவர் பரசுராமன் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான Tata Institute of Social Sciences-இன் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான முனைவர் பரசுராமன் […]

#Death 3 Min Read
Default Image

செப்-4ம் தேதி திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள்… தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் […]

#CMMKStalin 9 Min Read
Default Image

#BREAKING: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் – ஓபிஎஸ் அறிவிப்பு

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. தேனி பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், […]

#AIADMK 3 Min Read
Default Image

#BREAKING: அதிமுக பொதுக்குழு செல்லும் – தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு!

இரு தலைவர்களும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த […]

#AIADMK 7 Min Read
Default Image

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு…!

கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனீ, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Rain 2 Min Read
Default Image

தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு – கோவை செல்வராஜ்

இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோவை செல்வராஜ் பேட்டி.  ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி,  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு […]

- 3 Min Read
Default Image

சென்னையில் புதிய நீதிமன்ற வளாகம் – 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!

சென்னையில் புதிய நீதிமன்ற வளாகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் பன்னடுக்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்க பிராட்வே பேருந்து நிலையம் பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பான பணி முடிந்ததும் உயர் நீதிமன்ற வளாகத்தில் […]

#Chennai 2 Min Read
Default Image

அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ – ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி,  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் […]

அதிமுக 3 Min Read
Default Image

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு – ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு. அரசுப்பள்ளிகளில் 9,10-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 11, 12-ம் வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- 2 Min Read
Default Image

டிடிவி தினகரன் தற்போது நலம்பெற்று வருகிறார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

டிடிவி தினகரன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.  அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் […]

ttv 2 Min Read
Default Image

#BREAKING: இது இறுதி தீர்ப்பல! மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் – ஓபிஎஸ் தரப்பு

தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், […]

#AIADMK 5 Min Read
Default Image

அதிமுக பொதுக்குழு – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…!

ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.  சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே […]

#ADMK 3 Min Read
Default Image

திமுக முப்பெரும் விழா – விருதுகள் அறிவிப்பு!

2022-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரின் பெயர்களை அறிவித்தது திமுக. விருதுநகரில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, பெரியார் விருது – சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது – கோவை ரா.மோகன், கலைஞர் விருது – திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் விருது – புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது -குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கபடுகிறது. விருதுநகரில் புதிதாக கட்டப்பட […]

#DMK 3 Min Read
Default Image

தங்கம் விலை சரிந்தது….சவரனுக்கு ரூ.120 குறைந்தது..!

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,560க்கு விற்பனை. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold silver price 2 Min Read
Default Image

சென்னையில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,104-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(செப்-2) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Petrol Diesel Price 1 Min Read
Default Image

சோனியா காந்தி தாயார் மரணம்..! ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல்…!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல்.  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், மதிப்பிற்குரிய சோனியா […]

- 3 Min Read
Default Image

#BREAKING: அதிமுக பொதுக்குழு – தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் […]

#AIADMK 4 Min Read
Default Image

இது சனாதனப் புத்தியின் எச்சம்! தானென்ற ஆணவத்தின் உச்சம்! – திருமாவளவன்

தமிழக நிதியமைச்சர் குறித்து அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்துக்கு திருமாவளவன் ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஒரு புகழ்பெற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்ததை தவிர, நீங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உருப்படியாக செய்ததுண்டா? அரசியலுக்கும், மாநிலத்திற்கும் நீங்கள் ஒரு சாபக்கேடு. நீங்கள் என் செருப்புக்கு கூட சமமாக மாட்டீர்கள் என  தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமமில்லை என்பது தான் […]

#BJP 3 Min Read
Default Image