உடல்நலக்குறைவு காரணமாக டிடிவி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதி. அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க […]
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை […]
குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன என அமச்சர் பொன்முடி குற்றசாட்டு. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. முத்ரா, விஜயவாடா துறைமுகங்களில் போதை பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார். ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் தான் மத அரசியல் செய்கிறார், பாஜக செய்யவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று […]
தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி. கார்த்திக் சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. எனவே யார் தலைவராக இருந்தாலும் இந்த தர்மசங்கடம் இருக்க தான் செய்யும். காமராஜர் ஆட்சி என்று சொல்ல, காமராஜர் போல இதுவரை […]
நெல்லையில் விவசாயத்தை காக்க புதிய கருவியை உருவாக்கிய வில்லேஜ் விஞ்ஞானி! விவசாய நிலங்களை, காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நெல்லையை சேர்ந்த தமிழழகன்(32) என்பவர் சோளக்கொல்லை பொம்மை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். தமிழழகன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழ்ந்து வருகிறார். அந்த பகுதியில் அத்தியாவசிய வேலை என்றால் அது விவசாயம் தான். மேற்கு தொடர்ச்சி காட்டு பகுதியில் உள்ள விலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து நாசமாக்குவதை தடுப்பதற்காக இந்த கருவியை கண்டுபிடித்துள்ளதாக தமிழழகன் கூறுகிறார். மேலும் […]
ஐஐடி, ஐஐஎம்-க்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவ மாணவிகள் IIT, IIM, AIIMS-களில் சேர்ந்தால் அதன் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் […]
தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை என டிடிவி தினகரன் ட்வீட். சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது […]
திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து 2017-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்துவதற்கான கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து 2017-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் குறைவாக உள்ளதாக கூறியுள்ளனர். அரசு உத்தரவை எதிர்த்து திரையரங்குகளின் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் பேச்சு. முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. அதெல்லாம் இப்போது சொல்லமாட்டேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம். விசாரணை அறிக்கையை […]
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அரிசி மூட்டைகளில் QR குறியீடு பதிக்க அரசு திட்டம். தமிழகத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகள் அண்டை மாநிலங்களுக்கு சட்டம் விரோதமாக கடத்தப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை கிடங்குகளில் இருந்து விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகளை கியூஆர் கோர்ட் என்ற பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு […]
சுங்க கட்டணத்தை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள 20 சுங்க சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே. […]
மருத்துவத்துறை காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறையில் நவம்பர் 15-க்குள் புதிதாக 4,038 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். தற்கொலைக்கு அதிக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருந்து கடைகளில் தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்து, ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் வாகனம் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]
ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் தான் மத அரசியல் செய்கிறார், பாஜக செய்யவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று என ஏற்கிறோம். முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு […]
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் […]
அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். மத்திய நிதி அமைச்சகம், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது அத்துடன் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘” எதற்கு கேட்கிறாய் வரி. யாரை கேட்கிறாய் […]
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.37,680-க்கு விற்பனை. ஒரு கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,103-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(செப்-1) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.