பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். எத்தியோப்பியாவில் இருந்து இக்பால் பாஷா என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில், ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சூட்கேஸ் மற்றும் பைகளுக்கு நடுவில் வைத்து மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, […]
மின் ஊழியர் ஒருவர், புகார் கொடுக்க வந்த நபரை மின் மோட்டார் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்திற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். காலை முதல் இணையத்தில் தமிழக அளவில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்ட வீடியோ என்றால், அது தர்மபுரி மாவட்ட பாலக்காடு பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதை பற்றி புகார் கொடுக்க ஒரு பெண் வந்துள்ளார். அந்த பெண்ணை, மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் மின் மோட்டாரை கொண்டு தாக்க முயற்சித்த வீடியோ தான். அதன் பின் உடனடி […]
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பெண்களுக்கான இலவச பேருந்து சேவை பற்றி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசின் முக்கிய முயற்சிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையும் ஒன்று. பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகள் குடும்பங்களுக்கு 8 முதல் 12% சேமிப்பை உறுதி செய்துள்ளது. இதன் பயனாளிகளில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் […]
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் நேரலில் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை கையாளும் நிலை இதுதானா? நிர்வாக காரணங்களால் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஆஜராகவில்லை என்ற விளக்கத்திற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண நபர்கள் ஆஜராகவில்லை எனில் […]
தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் […]
எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் […]
சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா? என ஜெயக்குமார் ட்வீட். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி அணிந்து வந்தவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என்றும் சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக […]
அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்.தமைக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், நெல்லை அகத்தியர் மலையை யானையை காப்பகமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில், 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்து […]
கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை. தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். […]
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை. மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது. அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில […]
அனைத்து மாவட்ட வளர்ச்சியை திராவிட நாடு கொள்கையின் முக்கியமான குறிக்கோள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில், இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, கொள்கைக்கான ஆலோசனை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், […]
இலங்கையில் கைது செய்யப்பட்ட 9 நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. அதே போல, கடந்த 10ஆம் தேதி நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே […]
போதை பொருளை ஒழிக்க முதல்வர் உறுதியேற்றது உண்மையானால், அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான் என எச்.ராஜா ட்வீட். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க அறிவுறுத்தி இருந்தார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,’போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் […]
திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப உறுதிப்படுத்தியுள்ளது என அண்ணாமலை அறிக்கை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் நமது மாண்புமிகு பாரதப் […]
புகார் கொடுக்க வந்த பெண்மணியை மின் மோட்டார் கொண்டு தூக்கி எறிந்து தாக்க முற்பட்ட மின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில், அடிக்கடி மின் விநியோகம் தடைபட்டு வந்ததால், ஒரு பெண்மணி தனது உறவினர் உடன் மின் அலுவலகம் வந்து புகார் அளிக்க வந்துள்ளார். ஆனால், அவரை புகார் அளிக்க விடாமலும், அதிகாரியை சந்திக்க விடாமலும், மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, பெண்மணி உடன் வந்த உறவினர், […]
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு. கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் சிபிசிஐடி காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை […]
சென்னை உணவு திருவிழாவில், பீப் அரங்கு அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் நா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம், சிக்கன் மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால், பீஃப் பிரியாணிக்கு அரங்கு […]