தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல்,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதே சமயம்,சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில இடங்களில் லேசான […]
சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை […]
அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சீமான் ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!’என பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் […]
தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை. காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எனவே புதிதாகவும், இடவசதியோடும், நவீன தொழில்நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும். […]
பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் குற்றசாட்டு. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை […]
புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது என்று அண்ணாமலை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம். நேற்று திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சுயலாபத்திற்காக தமிழக அரசின் மீது குற்றம் […]
தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் நாளை தொடக்கம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றோரு பக்கம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் 23-ம் தேதி தொடங்கி […]
பாஜகவினருக்கு கூடும் கூட்டம் காக்கா கூட்டம். ஆனால் அதிமுகவுக்காக கூடும் கூட்டம் கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜு விமர்சனம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்ம், அதிமுக மீதான அண்ணாமலை வி,அரசனும் குறித்து பதிலளித்திருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை,முருகன் ஆகியோர் அரசு பதவி பெறுவது பெற்றதை சுட்டிக்காட்டி, அண்ணாமலை தனக்கும் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் அதிமுகவை […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல […]
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார். பிரதமர் மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சமீபத்தில் […]
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். சென்னை தலைமை செயலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இந்நிகழ்வின் போது, முல்லைப்பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கும், பெரியாறு அணை முகாம், தேக்கடி […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ், ஈபிஎஸ். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காயத்ரி ரகுராம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி ரகுராம் அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது வருங்கால பிரதமர், இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர், இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர், இல்லையென்றால் முதலமைச்சர், இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு. சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இந்த 8 பேரையும் நிரந்திர நீதிபதிகளாக தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், கே.முரளிசங்கர், டிவி.தமிழ்செல்வி, ஆர்.என். மஞ்சுளா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், கூடுதல் நீதிபதியான எஸ்.சதீஸ்குமார் மட்டும் வேறு […]
சென்னையில் 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே தொடக்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு மசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். சுமார் 3.42 கோடி மதிப்பில் மொத்தம் 25 மின் வாகனங்கள் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, […]
தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் […]
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த தங்கம் விலை அதிகரித்த நிலையில், தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280குறைந்து, […]
சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கவால்துறையினர் சிறுமியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலியை கைது செய்தனர். கருமுட்டை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் […]
சென்னையில் 14-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில், 13 நாளாக பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமுமில்லை. இந்த நிலையில், 14-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 […]
பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஓபிஎஸ், கடந்த 29 மற்றும் 30-ஆம் தேதி நடைபெற்ற அம்மா பேரவையின் திறன் மேம்பாட்டு கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல என்று பேசிய கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் […]