தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவ பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலமாக சற்று முன்னர் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம்,கடலில் மூழ்கி தவிப்பவர்களை மீட்கவும்,கடல் விபத்துகளை குறைக்கவும் 14 கடலோர கிராமங்களை சேர்ந்த 1000 இளைஞர்களுக்கு உயிர்காக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்காக ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் எதிர்ப்பு. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தீட்சிதர்கள் கோயில் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறையின் விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்குகள் தொடர்பாக ஆய்வு நடத்த அறநிலையத்துறையின் விசாரணை குழு […]
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. இந்நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது என திமுக அறிக்கை. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு […]
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக […]
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில்,அங்குள்ள அருவியில் குளிப்பதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.அதன்படி,எண்ணெய் மசாஜ் செய்து ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் பலர் குளித்து மகிழ்ந்தனர்.மேலும்,சுற்றுலாப் பயணிகள் பலர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் பல்வேறு பகுதிகளையும் கண்டு ரசித்தனர். குறிப்பாக,பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல் பகுதிக்கு வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நீர் […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,”NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்கவும் […]
ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி […]
பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல். தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி […]
திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு என்று இபிஎஸ் குற்றசாட்டு. சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம், ஓமலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. திமுக ஆட்சியில் நடந்த […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு. தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்றாலும், உயர் நீதிமன்றம் கூட பரிசீலிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டியிருந்தாலும் அதை சட்டவிரோதம் என உயர் […]
முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானதால் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம். நிதி முறைகேடு புகாரில் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் ஷர்மிளா ஜி.மோகன். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றபின் ஊராட்சி நிதியை சொந்த வங்கி கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்ததாக குற்றசாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், […]
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் -க்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் தாக்கல் […]
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 7 போரையும் காப்பாற்ற முடியுமா? முடியாதா?என்று கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில , திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை இரு தினங்களில் வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அமைச்சர் விளக்கம் இந்நிலையில்,கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரு பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும்,இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் […]
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு […]
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நாளை நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,திருவண்ணாமலை, வேலூர்,நாமக்கல்,கரூர்,திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.அதே சமயம்,சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயிலாக இருப்பதால்,கோயில் விவகாரங்களை விசாரிக்க குழு அமைக்க அதிகாரம் உண்டு […]