ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப […]
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல். தமிழகத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும். […]
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் […]
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,தமிழக கடலோரப்பகுதி,தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,கேரள கடலோரப் பகுதிகள்,லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையிலான வேகத்தில் […]
அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை. ஈழத்தை பெற்றுக் கொடுப்பேன் என அமித் ஷா, நரேந்திர மோடி என்னிடம் கூற வேண்டும். 8 ஆண்டுகளாக ஈழத்தை பற்றி பேசாத […]
சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது மக்களின் சொத்தே ஆகும். அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 79 மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு […]
உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என முதல்வர் ட்வீட். இன்று உலக பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை […]
கந்துவட்டி பிரச்சனையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கந்துவட்டி அனிதா கைது. கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை செல்வகுமார். இவர் கடந்த 1-ஆம் தேதி கந்துவட்டி பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செல்வகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் செல்வகுமாருக்குரூ.5 லட்சம் வழங்கிய நிலையில்,ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து […]
திமுக அரசு செய்யும் காரியங்களை கண்டு பாஜக அமைதியாக இருக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார். அதில், மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை முற்றுகையிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். […]
மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு புதிய மனு. மேகதாது அணை விவகாரத்தில் விவாசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக […]
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன் கடை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமிழக அரசு முன்வர வேண்டும். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த பதிவில், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது […]
நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பத்து ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள இந்த விடியா ஆட்சியாளர்கள், காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் பாய்ந்தது போல, தமிழகத்தை பிரித்து மேயத் தொடங்கி இருக்கிறார்கள். […]
வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. வரும் 24-ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் அறிக்கையை தயார் செய்ய அவகாசம் இல்லை என்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. […]
ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சி பொன்னம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்ற கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற பேரூராட்சி நிராவகம் முடி செய்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் […]
நாங்கள் தலையிட கூடாது என்று சொல்லுகின்ற உரிமை மதுரை ஆதீனத்துக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கருத்து. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், கோயில்களில் அரசியவாதிகளுக்கு என்ன வேலை என்று மதுரை ஆதினம் தெரிவித்ததை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மிகவும் அடக்கி வாசித்துக் கொண்டியிருக்கிறோம். நாங்களும் எகிறி அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது என்பதால் சற்று பின்னால் வருகிறோம் என அதிரடியாக […]
அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அர்ப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை […]
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், […]