அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? – அண்ணாமலை

திமுக அரசு செய்யும் காரியங்களை கண்டு பாஜக அமைதியாக இருக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

திமுக அரசு செய்யும் காரியங்களை கண்டு பாஜக அமைதியாக இருக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார். அதில், மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை முற்றுகையிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு தமிழ்நாடு பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

unknown node