வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
unknown nodeஅதே சமயம்,தமிழக கடலோரப்பகுதி,தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,கேரள கடலோரப் பகுதிகள்,லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதாலும், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
unknown node