உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில்,குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி எனவும், பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை இனியும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து குறிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: “குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள்;குழந்தைப் பருவம் […]
பள்ளி வாகனத்தில் கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாட்டு சாதனம் இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் அம்மாவட்ட ஆட்சியர். இதன்பின் பேசிய அவர், பள்ளி வாகனத்தில் இது இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் எதிரொலியால் இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், மருத்துவத்துறை கூடுதல் செயலாளர் தலைவராகவும், குடும்பநலத்துறை இயக்குனர் துணை தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் அமைப்பை சேர்ந்த […]
ரேஷன் கடை பணியாளர்கள் கவலைப்படாமல் பணியாற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டனர் என்றும் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு […]
நாமக்கலில் கடந்த புதன்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டதுக்கு தலைமை தாங்கி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்து விட்டார்”,என்ற தவறான தகவலை கூறிய நிலையில்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து,அண்ணாமலையில் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆற்காடு வீராசாமி அவர்களின் மகனுமான கலாநிதி வீராசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில்,20-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை,வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் வரை […]
இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னைவாசி மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று (ஜூன் 11-ஆம் தேதி) முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 137 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து […]
கோவை கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவினர் தெரிவித்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை. சட்டத்திற்கு உட்படாமல் ரவுடிகளை போல் யார் செயல்பட்டாலும் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவை சேர்ந்தவர்கள் அறிவித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறந்து வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும். சட்டத்தை கையில் […]
நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் […]
தூத்துக்குடியில்மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெபசிங், திருவிக நகரை சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரும் மதுபோதையில் 3-வது மைல் மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியே […]
கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் […]
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]
கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் அடிமையாகியுள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது குடும்பத்தையும் சிலர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை நந்தபாக்கத்தில் கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மகனின் பள்ளி கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கணவர் எடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதால், மனமுடைந்த மனைவி […]
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 2-ஆவது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்தது. தமிழக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு. அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளித்து, கடந்த 2012ல் ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். ராமஜெயம் கொலை […]
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி. தருமபுரி: ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட […]