தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய கோவிலின் 438-வது திருவிழா, ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சில கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி தூய பனிமய மாதா கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குதந்தையர்கள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை பனிமய மாதா கோவிலில் ஊரடங்கு காரணமாக மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதரு A.ஸ்டீபன் அவர்களால் கொடியேற்றப்பட்டது. மேலும் கொடியேற்றத்தை தொடர்ந்து, பத்து நாட்களும் சிறப்பு திருப்பலிகள், உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் இணையதளம் வாயிலாக மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…