,

நாடாளுமன்ற தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

By

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசு

அதேபோல், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக சீமான் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். மேலும், மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023