பேனா நினைவுச் சின்னம் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை.!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Pen statue and Supreme Court

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் பேனா சிலைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகள் கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், ஜூலை 3ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, தங்களுக்கு ஆதாரம் சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் பேனா சின்னம் தொடர்பான வழக்குகள் நாளை (10.08.2023) ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.