தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் வெயில் அலர்ட் கொடுத்துள்ளது.
இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் :
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்ஸியஸை விட அதிகமாக இருக்ககூடும். 34-35 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் ஏப்ரல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப்.11,12ஆகிய தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.