பெரம்பலூர் : பாஜக நிர்வாகி வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.! கார், பைக் சேதம்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல். போலீசார் தீவிர விசாரணை.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல். போலீசார் தீவிர விசாரணை.

பெரம்பலூர் மாவட்டம்  திருமந்ந்துறை சுங்க சாவடி அருகே வசித்து வருகிறார் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி. இவர் தனது காரை நேற்று (பிப்ரவரி 14) தனது வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு இருந்துள்ளார். அப்போது இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது வீட்டை கற்கள் கொண்டு தாக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில்  தடா பெரியசாமி வீட்டின் முன் நிற்க வைத்திருந்த கார் சேதமடைந்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்துளளது. இந்த சமபவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.