பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்..!

பேரறிவாளன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு உள்ள நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய மனுவும் , பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தின் நகல் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.