பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது மகனுக்கு நீண்ட விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிரையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்காய்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பல உடல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளது.
இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது மகனுக்கு நீண்ட விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, அற்புதம்மாள் அவர்கள் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர்.
மேலும், அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடரவேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்க கோரி 10ம்தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node