தமிழகத்தில் பெரியார் சிலை மீண்டும் உடைப்பு! போலீசார் விசாரணை

this news given information about Periyar statue breaks down in Tamil! Police investigation

புதுக்கோட்டை  அருகே பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டடுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளராகவும், சமூகப்புரட்சியின் வழிகாட்டியாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராகவும் , பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராகவும் , மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகவும்  செயல்பட்ட தந்தை பெரியார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெரியார் சிலை மீது ஷூ வீசுவது,

சிலை மீது  காலணிகளை வைப்பது உள்ளிட்ட செயல் நடைபெற்று வருகிறது.

இதை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகேயுள்ள பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டடுள்ளது.இது தொடர்பாக  மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.