#BREAKING: நாளை முதல் சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்களை திறக்க அனுமதி ..!

Permission to open shopping malls in 9 places in Chennai from tomorrow ..!

சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 30-ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் 31072021 (சனிக்கிழமை) முதல் 09.082021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என தெரிவித்தது.

இந்நிலையில், 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 9 இடங்களில் கடைகளுக்கான தடை நாளை காலையுடன் முடியும் நிலையில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக வளாகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.