சேலத்தில் நூதன  மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்..

சேலத்தில் கார்களுக்கு வாடகை தருவதாக உரிமையாளர்களிடம் இருந்து பெற்று, அவற்றை அடகு வைத்து நூதன  மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் கார்களுக்கு வாடகை தருவதாக உரிமையாளர்களிடம் இருந்து பெற்று, அவற்றை அடகு வைத்து நூதன  மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் பாலாஜி நகரைச் சேர்ந்த இர்பான், சிட்டி கார்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்களை அணுகி, தன்னிடம் கார்களை தந்தால் அவற்றை வாடகைக்கு விட்டு மாதாமாதம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து 15க்கும் மேற்பட்டோர் தங்களது சொகுசு கார்களை இர்பானிடம் கொடுத்தனர்.

அவர்களுக்கு, முதல் மாத வாடகையை வழங்கிய இர்பான், அதன்பின்னர் பணம் தரவில்லை. தங்களது கார்களை திரும்ப தருமாறு இர்பானிடம் கேட்டபோது, அவர் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இர்பானை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் உரிமையாளர்களிடம் பெற்ற கார்களை பல்வேறு நிதிநிறுவனங்களை அடகு வைத்து பல லட்சம் பணம் பெற்று, மோசடி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இர்பானிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், 10க்கும் மேற்பட்ட கார்களை மீட்டுள்ளனர்.