பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நக்கீரன் கோபாலின் முன்ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்வ்