பொள்ளாச்சி பாலியல் வழக்கு – அக்.6க்கு ஒத்திவைப்பு!

Postponement of trial in sexual harassment case to October 6.

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி வாயிலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அவர்களை காவல்துறை ஆஜர்ப்படுத்திய நிலையில், இந்த தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்குமுன் பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு 5 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அதிமுக பிரமுகர் ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை இளம் பெண்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.