பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு:ஏப்ரல் 2 வரை 4 பேருக்கும் காவல்

this news gives information about Pollachi Sexual Assault Case: Four persons were detained till April 2

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தற்போது அடுத்த கட்டத்தை நெருங்கியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு ஏப்ரல் 2 வரை நாலு பேருக்கும்  காவல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தற்போது அடுத்த கட்டத்தை நெருங்கியுள்ளது. திருநாவுக்கரசு, சபரீ ராஜன், சதீஷ் வசந்தகுமார் ஆகிய நால்வர் இந்த வழக்கில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்

கடந்த 8 வருடங்களாக சமூக வலைதளங்களின் மூலம் பெண்களை மயக்கி அதன் மூலம் அவர்களை நம்பி அந்த பெண்களை வன்கொடுமை செய்து வீடியோக்கள் எடுத்து வைத்த ஒரு கும்பல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது பொள்ளாச்சியைச் சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள் இந்த வழக்கில் தொடர்பில் உள்ளனர். இந்த செய்தி வெளியே வந்து, கடந்த ஒரு மாதமாக தமிழகமே தீயாய் பற்றியிருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திருநாவுக்கரசு, சபரி ராஜன் ,சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் கட்ட விசாரணை முடிந்து அடுத்த கட்ட விசாரணைக்காக அவர்களை காவல்துறை நீதிமன்றம் மூலம் எடுத்துள்ளது. இந்த நால்வருக்கும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை காணொலி காட்சி மூலம் பதிவு செய்யப்பட்ட காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.