பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது.
unknown nodeஇந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 15-ஆம் தேதி -மதுரை அவனியாபுரம் ,16-ஆம் தேதி- பாலமேடு மற்றும் 17-ஆம் தேதி- அலங்காநல்லூரிலும் நடைபெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதேபோல் மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.