பொங்கல் பரிசு: முன்கூட்டியே தகவல் தர இயலாது – தமிழக அரசு!
பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில், பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு, வழக்குக்காக முன்கூட்டியே தகவல் தர இயலாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த சுந்திர விமலநாதன் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலர், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் பதில் தர ஆணையிட்டு வழக்கு டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.