ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை.!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சூதாட்டத்திற்கு தடை என்று சொல்லும் போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும். முக்கியமாக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும்.

முக்கியமாக, ‘Pornography’ உள்ளிட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பலர் தங்கள் உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்கள் அதிகமாக நிகழவே, தமிழக அரசு இதனை குறிப்பிட்டு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட மசோதாவை நிறைவேற்றி அதற்கு அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதற்கு, இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த, சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில்  நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.