பொருநை இலக்கிய திருவிழா – முதலமைச்சர் உரை

By

பொருநை இலக்கிய திருவிழாவை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நெல்லையில் இன்றும் நாளையும் தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் பொருநை இலக்கிய திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

பொருநை இலக்கிய திருவிழாவை துவக்கி வைத்தபின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் சமூகம், இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை ஆகிய 5 இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது.

இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும். அறிவுசார் சமூகத்தை வளர்த்தெடுக்கும் இலக்குடன் இளகிய திருவிழாக்கள் நடக்கவுள்ளன என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023