மின் மிகை மாநிலம் தமிழகம் – முதல்வர் பழனிசாமி

Chief Minister speaks in AIADMK campaign that we have turned Tamil Nadu, which was a power deficient state, into a power surplus state

மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றினோம் என்று அதிமுக பரப்புரையில் முதல்வர் பேச்சு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அணைத்து கட்சிகளும் அதற்கு ஆயுத்தமாகி வருகின்றனர். அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் பழனிசாமி பரப்புரையை தொடங்கியுள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று தனது 2–வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் துவக்கினார். மலைவாழ் மக்கள் நடனமாடி அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து கூறி, திருச்சி முசிறியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றினோம் என்றும் முசிறி – நாமக்கல் இடையே நான்கு வழி சாலை அமைக்கப்படும். உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.