முன்னெச்சரிக்கை நடவடிக்கை -முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை! 

Chief Minister Palanisamy is scheduled to hold consultations at the General Secretariat today regarding monsoon warnings.

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.அண்மையில் வந்த நிவர் புயல் காரணமாக சேதங்கள் அதிகம் இல்லையென்றால் பல இடங்களில் குளம்போல நீர் தேங்கியுள்ளது.மேலும் புயல் ஏற்படுத்திய சேதங்களை சீரமைக்கும் பணிகளும், நடைபெற்று வருகிறது.நிவர் புயல் முடிவடைந்த நிலையில் ,தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ,இன்று புயலாக வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.