மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று மற்றும் நாளை இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை. இன்று காலை டெல்லியில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
unknown nodeவரவேற்பு :மதுரை விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் திரௌபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை தமிழக அமைச்சர் மெய்யநாதன் வரவேற்றார்.
பூரண கும்ப மரியாதை :தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர் ரவி ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.