, ,

தாராபுரம் பிரச்சார பொதுக்கூட்டம் மேடையில் பிரதமர் மோடி.!

By

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். 

கேரளாவில் பாலக்காடு தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தடைந்தார். உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் எல் முருகனை பிரதமர் மோடியை வெற்றி வேல், வீர வேல் என முழக்கத்துடன் வரவேற்றார்.

இந்த பொதுக்கூட்டம் தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரித்து பரப்புரை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Dinasuvadu Media @2023