கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என கூறியதை திமுகவுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்? என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.