புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!

கொரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன்மற்றும் ஆஃப்லைன் மூலம் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.