கர்நாடாவை போல தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைத்தால் பந்து மாதிரி தூக்கி போட்டு மிதிப்போம் என்று தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பேசிய, அமைச்சர் அதிமுக மனிதர் ஆரம்பித்த கட்சி இல்லை புனிதர் ஆரம்பித்த கட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வென்றது. 13 என்பது பேய்களின் நம்பர் ஆனால், 9 என்பது நவ ரத்தினங்கள், எனவே நாங்கள் நவரத்தினங்களை பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.
கர்நாடக மாநிலத்தை போல தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விடலாம் என்று ஸ்டாலின் எண்ணினால் அவர்களை பந்து போல தூக்கி போட்டு மிதிப்போம் என்று கூறிய அமைச்சர் திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா நாங்கள் அவர்களை விட மோசமானவர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…