ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.!

Rajinikanth's entry into politics, fans in Tamil Nadu have been celebrating by exploding firecrackers and offering sweets in various places.

சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள். நான் என்னுடைய கருத்தை கூறினேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என தெரிவித்த நிலையில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு என தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தமிழகத்தின் தொடர்ந்து ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.