இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். அதன்படி, இந்த ரமலான் மாதத்தின் 30 நாட்கள் உண்ணாமல், பசி, தாகம் பொறுத்து, புலன்களை, இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்ளும் தவத்தின் நிறைவுநாள்தான் ரம்ஜான் பெருநாள்.
unknown nodeஇப்பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
unknown nodeரம்ஜான் சிறப்பு தொழுகை:
மதுரையில் தமுக்கம் மைதானம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்புகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அந்த வகையில், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தென்பட்டதையடுத்து ரம்ஜான் பண்டிகையின் கொண்டாட்டம் இன்றே தொடங்கியது.
unknown nodeசிறப்பு பேருந்து:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை சென்னை, கோயம்பேட்டில் இருந்து இன்று 300 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை மற்றும் மதுரை போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்படும்.