3வது முறையாக கிராம சபை தீர்மானம்.! பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.!

பரந்தூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அக்கிராமம் சுற்றி அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரந்தூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அக்கிராமம் சுற்றி அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை அடுத்து சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக கிட்டத்தட்ட 4500 ஏக்கர்களுக்கு அதிகமான நிலங்கள் கையப்படுத்தப்பட உள்ளன.

இதற்கு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கிட்டத்தட்ட 95 நாட்களுக்கு அதிகமாக தங்கள் எதிர்ப்பை பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பரந்தூரில்  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு முன்னர் ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2ஆம் தேதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.