ஆம்பூரில் இருதரப்பினரிடையே கலவரம்! வாக்குப்பதிவு நிறுத்தம்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நேற்று  நடைபெற்றது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நேற்று  நடைபெற்றது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆம்பூரில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே கலவரம் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து போலீசார் நடத்திய தடியடியில், ஒருவருக்கு மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.