அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.!

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில்

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முககவசம் அணிவதன் கட்டாயம் போன்ற வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 3 மாத காலம் கொரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் இந்நேரத்தில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், கூறிய அவர் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் உடல்நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கொரோனாவுக்கான அறிகுறியுடையவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்வது இலவசம் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பரிசோதனை மைதானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.