ரோகிணி விவகாரம்: நரிக்குறவர்களை அனுமதிக்காத புகாரில் பணியாளர் மீது வழக்குப்பதிவு.!

சிம்பு நடிப்பில் இன்று வெளியான ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சிக்கு,  சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலர் டிக்கெட் எடுத்து

சிம்பு நடிப்பில் இன்று வெளியான ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சிக்கு,சென்னையில் உள்ளரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலர் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்குள் வந்துள்ளனர். ஆனால், டிக்கெட் இருந்தும் இருவரை ரோகிணி திரையரங்க ஊழியாளர் ஒருவர் உள்ளே விட மறுத்தார்.

இது தொடர்பான வீடியோ காலையில் இருந்து இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பலரும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் குமரேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவகாரம் குறித்து வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்படு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பத்து தல படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால்  படத்துக்கு குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அனுமதி மறுப்பு எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கும் நோக்கில் மீண்டும் அனைவருக்கும் அனுமதி எனவும்  ரோகிணி திரையரங்கம் விளக்கம் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.