போதையில் வாகனம் ஓட்டியோரிடம் இருந்து ரூ.15 கோடி வசூல்...போக்குவரத்து காவல்துறை தகவல்.!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிழும், விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

drinking driving fine chennai

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிழும், விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மது அருந்திவிட்டு  வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. அந்த அபராதம் செலுத்தாவிட்டால் அசையும் சொத்துக்கள் பறிமுதல்  செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ,  சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 15. 13 கோடி அபராதம் வசூல் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை புறநகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருந்த 14,13,638 வழக்குகளில் ரூ.15,13,66,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.