கோமதிக்கு ரூ.15 லட்சம்,வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம்-அதிமுக அறிவிப்பு

கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

unknown node

இந்நிலையில் கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் பரிசுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதிமுக.

unknown node

ஏற்கனவே  திமுக சார்பில்  800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 இலட்சம் மற்றும்  4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 இலட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

மேலும் கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.