பிரதமர் மோடி வழிகாட்டுதலில் தமிழகத்தில் ஆட்சி – எல் முருகன்

Tamil Nadu BJP leader L Murugan has said that the BJP has become an inevitable force in Tamil Nadu. Rule under the guidance of Modi

தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது. பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகள் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே, பாஜக – அதிமுக இடையே கூட்டணி இருந்தாலும், அவ்வப்போது கருத்து வேறுபடும் நிலவி வருகிறது. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க பாஜகவை தொடர்ந்து, பாமகவும் மறுப்பது குறித்த கேள்விக்கு, மாநில கட்சியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுக்கிறது எனவும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் எனவும் குஷ்பு பதில் தெரிவித்திருந்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாளில் பாஜக அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.