டாஸ்மார்க் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் தங்கமணி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்துள்ளது. மாத சம்பளமாக இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டதாக

தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்துள்ளது. மாத சம்பளமாக இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டதாக மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில வருவாயானது  மிகவும்  அதிகமாக வரக்கூடியது டாஸ்மார்க் கடைகளில் இருந்து தான் . மாநில வருவாயில் சுமார் 50 சதவிகிதம் குடிமக்களிடம் இருந்து வருகிறது. வருவாயை அதிகமாக தரக்கூடிய பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும்  ஐம்பதாயிரம் ஊழியர்கள் வரை பயனடைவார்கள்.