ஜெயலலிதா மரணம் தொடர்பாக, வரும் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
unknown nodeஅதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
unknown nodeபின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும் , மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 22 ஆம் தேதியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால் சம்மனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் 2 முறை அவரது தேதி மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, வரும் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.