சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை சரத்குமார் மற்றும் ராதிகா வழங்கினார்கள்.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இதையடுத்து, தற்போது ஜுலை 2இல் திருமணம் நடத்தவும், அதன்பிறகு சென்னையில் உள்ள ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, திரை பிரபலங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார் மற்றும் ராதிகா வழங்கியுள்னர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
unknown nodeமுன்னதாக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் வழங்கியிருந்தனர். மேலும், நேற்றைய தினம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது
