தினகரனிடம் சென்றது சசிகலா பதவி ! அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு

அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார்.

அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார்.

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .

இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

ஆனால் தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும்  இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தேர்தலில் போட்டியிட தினகரனின் அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை.அந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் அமமுக கட்சி அங்கிகரிக்கப்படாத கட்சி ,எனவே  வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று தெரிவித்தது. மாறாக பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டது.அதன்படி தேர்தலிலும் போட்டியிட்டது அமமுக.

unknown node

இந்நிலையில் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார்.சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக தேர்வானார்.சசிகலாவிடம் இருந்த பதவி தற்போது தினகரனிடம் சென்றுள்ளது.பின்னர்  அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவுள்ளார்.