மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!

Sasikala, who is being treated at the Bangalore Victoria Government Hospital, has been diagnosed with corona infection.

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சி.டி. ஸ்கேனை அடுத்து இன்று செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், சசிகலாவுக்கு தைராய்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்று தகவல் கூறப்படுகிறது. இதனால், வரும் 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. அப்படி விடுதலை ஆனாலும், சென்னை வருவது மற்றும் வரப்போக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, எந்த கட்சி என மிக கடினமான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.