எஸ்.பி.பி மறைவு: எனது குரலாக பல ஆண்டுகாலம் ஒலித்தீர்கள் – ரஜினிகாந்த் இரங்கல்.!

எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்றும் அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி அவர்களின் மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். அவருக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. எஸ்.பி.பி-ஐ இழந்து வாழும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். மேலும், அவரது பதிவில் எஸ்.பி.பி அவர்கள் பல ஆண்டுகளாக எனது குரலாக ஒலித்தீர்கள். உங்களது குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும். நான் உங்களை உண்மையிலேயே இழப்பேன் என்று பதிவில் தெரிவித்துள்ளார்.

unknown node