சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் பேருந்திலிருந்து இறங்கிவிடும் ஊழியர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், 2-ஆம் வகுப்பு மாணவர் வேன் மோதி உயிரிழந்த நிலையில், பள்ளி வாகனம் பாதுகாப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பள்ளி வாகனங்களின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளி வேன் மோதி மாணவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…