TN Congress leader Selvaperunthagai [file image]
Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்.
கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26ம் தேதி 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
பிரதமர் கூறியதாவது, நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்றும் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு சொத்துக்கள் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது கூறியதாக தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது, பிரதமர் பதவியை வகிக்க தமக்கு தகுதியில்லை என மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.
முதற்கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தராது என்பதால் தோல்வி பயத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மிக மிக இழிவான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார். பிரதமரின் பரப்புரை மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…